10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, செப்.6-
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவருடைய பெற்றோர், மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி 1½ மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி அவளிடம் விசாரித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் சதீஷ் பெரியான் (வயது 31) என்பவர் கடந்த 3 மாதமாக கற்பழித்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ் பெரியானை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.