5 ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை

5 ஆடுகள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-05 19:08 GMT
அரியலூர்
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி(40). நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது ஆடுகளை வீட்டின் முன்பாக கட்டிவைத்துவிட்டு இரவு தூங்க சென்று விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த 3 வெள்ளாடுகள் திருடுபோய் இருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். அதேபோல்  நாகமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த சாமிதுரை(60) என்பவருக்கு சொந்தமான 2 வெள்ளாடுகள் திருடுபோனது. இதுகுறித்து இருவரும் தனித்தனியாக விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்