வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்

வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்

Update: 2021-09-05 18:23 GMT
கூடலூர்

கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே பீடிக்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் காட்டுயானைகள் ஊருக்குள் வந்தது. தொடர்ந்து அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை மிதித்து நாசம் செய்தது.

இதில் ராஜன், சந்தோஷ் உள்ளிட்ட சில விவசாயிகளின் 350-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்தது. இதனால் அவர்கள் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். உடனே கிராம மக்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

மேலும் செய்திகள்