கடலில் தவறி விழுந்த வாலிபர் சாவு

கடலில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமா உயிரிழந்தார்.

Update: 2021-09-05 17:36 GMT
பனைக்குளம், 
ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளம் ஊராட்சி வட்டான்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி (வயது 32). இவர் உறவினர்களுடன் அரியமான் கடற்கரைக்கு சென்றார். நேற்று மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான புதுநகரத்திற்கு செல்ல  மீனவர் ஒருவரின் பிளாஸ்டிக் படகில் தயாநிதி உறவினர்களுடன் தர்கா வலசை கடற்கரை நோக்கி கடலில் சென்றுள்ளார். அப்போது படகில் இருந்து திடீரென தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை காப்பாற்றி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
இதனைத்தொடர்ந்து இவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினரிடம் ஒப்படைக்கப் பட்டது. இறந்த தயாநிதிக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்