கர்ப்பிணியை தாக்கியவர் மீது வழக்கு

வீடுபுகுந்து கர்ப்பிணியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-09-05 17:30 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது27). இவர் ஊரில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது அதே பகுதியை சேர்ந்த மாதவன் மகன் மணிகண்டன் (35) என்பவர் செருப்பு போட்டுக் கொண்டு ஆடினாராம். கோவில் திருவிழாவின் போது இவ்வாறு செருப்பு அணிந்து கொண்டு ஆடலாமா என்று கேட்டு பால்ராஜ் மணிகண்டனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன்  பால்ராஜின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதோடு அவரின் மனைவி கர்ப்பிணியான வித்யா (23) என்பவரையும் மிதித்து தாக்கினாராம். இதில் வயிற்றில் வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வித்யா சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம்பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்