மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் இறப்பு
மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் இறந்தன.
தொண்டி,
திருவாடானை தாலுகா பாண்டுகுடி அருகே உள்ளது இளையாத்தான் வயல் கிராமம். இங்குள்ள வயல்காட்டு பகுதியில் பாண்டுகுடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, ராமச்சந்திரன், ரவி, முருகன் ஆகியோருக்கு சொந்தமான காளை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அப்போது அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பிகளில் இருந்து மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து கிராம மக்கள் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மின் வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின்தடை செய்தனர். தாசில்தார் செந்தில் வேல்முருகன் உத்தரவின்பேரில் சம்பவ இடத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாண்டுகுடி, எட்டுகுடி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.