ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு

ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.;

Update: 2021-09-05 16:55 GMT
திருப்பத்தூர்

ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ரேஷன் கடைகளில் தமிழக அரசு வழங்கிய 13 வகையான பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்ைத பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நடந்தது.

 நிகழ்ச்சிக்கு கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ெயலாளர் கோபிநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மோகன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றிய திம்மாம்பேட்டை பக்தவச்சலம், மிட்டூர் சரவணன், ஆம்பூர் மோகன், சாணங்குப்பம் கார்த்திகா ஆகியோருக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், பொதுவினியோகத் திட்ட துணைப்பதிவாளர் முரளிகண்ணன், சார்பதிவாளர்கள் தர்மேந்திரன், முனிராஜ், செல்வகுமார், திப்பு திலீபன், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர். 

நிகழ்ச்சியில் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் பெருமாள், கோவிந்தசாமி, பக்தவச்சலம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

---
Image1 File Name : 6072901.jpg
----
Reporter : S. RAJESHKUMAR  Location : Vellore - KANTHILI

மேலும் செய்திகள்