அரசு பள்ளி சுவரில் அழகாய் ஒளிரும் ஓவியங்கள்

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி சுவரில் மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

Update: 2021-09-05 16:51 GMT
தேனி : 

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாலார்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை முன்னேற்றும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கும் வகையில், பள்ளி சுவர்களில் பல வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.


 பள்ளி தலைமையாசிரியர் ஜோஸ்பின் புஷ்பராணி முயற்சியால், பாலார்பட்டியை சேர்ந்த முன்னாள் மாணவரும், ஓவியருமான மாதவன் மூலம் பள்ளியின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. அதில் தேச தலைவர்கள், இயற்கை காட்சிகள், விழிப்புணர்வு ஓவியங்கள் ஆகியவை கண்களை கவரும் வகையில் உள்ளது. 

இந்த ஓவியங்களால் பள்ளியின் சுவர்கள் அழகில் மிளிர்கின்றன. ஓவியம் வரைந்து பள்ளிச்சுவரை அழகுப்படுத்திய மாதவனை ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்