துங்காவியில் உடைந்த மின்கம்பம் மாற்றம்

துங்காவியில் உடைந்த மின்கம்பம் மாற்றம்

Update: 2021-09-05 16:26 GMT
போடிப்பட்டி
உடுமலை தாராபுரம் நெடுஞ்சாலையில் துங்காவியையடுத்த குமரலிங்கம் பிரிவில் உள்ள மின் கம்பம் உடைந்து துண்டான நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தது.இதனால் மிகப்பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் உடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதுகுறித்து நமது ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 2-ந்தேதி படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். 
இதனையடுத்து உடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டு அந்த பகுதியில் புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்