ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து எச்.ராஜா ஆறுதல்

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததையொட்டி பெரியகுளத்துக்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எச்.ராஜா ஆறுதல் கூறினார்.

Update: 2021-09-05 16:11 GMT
பெரியகுளம்: 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 1-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து பெரியகுளத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா, விஸ்வ இந்து பரிஷித் மாநில ஒருங்கிைணப்பாளர் கோபால்ஜி ஆகியோர் நேற்று நேரில் சென்றனர். 

அங்கு விஜயலட்சுமியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்.பி. மற்றும் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்