நெமிலி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
நெமிலி
பெரியகாஞ்சி தானப்பநாயகர் தெருவை சேர்ந்தவர் முருகனின் மகன் செந்தில் (வயது 35). இவர் தனது மனைவி ரேகாவுடன் நெமிலியை அடுத்த சயனபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அருகில் உள்ள ரேகாவின் அண்ணி வீட்டில் ஓய்வெடுக்க செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திருப்பி வரவில்லை. சந்தேகமடைந்த ரேகா அருகில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. ஜென்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, மின்விசிறியில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு கதறினார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஜன்னலை உடைத்து உள்ளே சென்று செந்திலை காப்பற்ற முயன்றனர். ஆனால் செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீசில் மனைவி ரேகா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.