குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து பா.ம.க. போராட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-05 14:35 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம் ஊராட்சி குரும்பபட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு அய்யர்மடம் பிரிவில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் வழியாக குரும்பபட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.11½ லட்சம் செலவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
ஆனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப்பொருளாகவே உள்ளது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று பா.ம.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் குரும்பபட்டி ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ரோஜாபூ மாலையுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். இதில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்