ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் கற்பழிப்பு; நைஜீரிய வாலிபர்கள் 2 பேர் கைது

பெங்களூருவில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரை கற்பழித்ததாக, 2 நைஜீரிய வாலிபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2021-09-04 21:45 GMT
பெங்களூரு:

இளம்பெண் கற்பழிப்பு

  ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து
ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணிற்கும், பானசாவடி பகுதியில் துணி வியாபாரம் செய்து வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த அந்தோணி(வயது 35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். மேலும் அந்தோணியும், இளம்பெண்ணும் பல விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்றதுடன், ஒன்றாக சேர்ந்து மதுஅருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி இளம்பெண்ணை, அந்தோணி தனது நண்பரும், நைஜீரியாவை சேர்ந்தவருமான ஒபகா(36) என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து இளம்பெண், அந்தோணி, ஒபகா ஆகிய 3 பேரும் சேர்ந்து மது
அருந்தி உள்ளனர். பின்னர் குடிபோதையில் இருந்த இளம்பெண்ணை அந்தோணியும், ஒபகாவும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து இளம்பெண் பார்த்த போது தான் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

2 பேர் கைது

  இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அந்தோணி, ஒபகா மீது பானசாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி, ஒபகா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

  இதற்கிடையே இளம்பெண்ணின் செல்போனில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பலரது எண்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் நைஜீரியா நாட்டினருக்கும், இளம்பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளார்கள்.

மேலும் செய்திகள்