1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நெய்வேலியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று நெய்வேலி தாண்டவபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்குள்ள குடிசை வீட்டில் 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இதை யாரோ மர்ம நபர்கள் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாவட்டத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து அந்த மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி பதுக்கி வைத்தது? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.