மாற்றுத்திறனாளிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்

Update: 2021-09-04 21:37 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு, தமிழக அரசு பாராட்டு தெரிவித்தது. இதையொட்டி நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கவிதை வாசித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர். 

அப்போது மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், தங்களது வீடுகளின் அருகில் யாரேனும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் தகவல் கொடுக்க வேண்டும், இதன் மூலம் சுகாதார ஊழியர்கள் நேரில் வந்து கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.

மேலும் செய்திகள்