சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
அந்தியூர்
ஈரோடு ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 28). இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (23). இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி சித்தோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதையடுத்து காதல் ஜோடியை ஞானசேகரின் உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.