பாளையங்கோட்டை சிறை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
பாளையங்கோட்டை சிறை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
நெல்லை:
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வருகிற அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் உள்பட 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீரமாணிக்கபுரம் பகுதியில் இருந்து பேரணியாக சென்றனர். அவர்களை குலவணிகர்புரம் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக இந்திய தேசிய லீக் கட்சியினர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.