கார் கவிழ்ந்து விபத்து- டிரைவர் உயிர் தப்பினார்

கார் கவிழ்ந்து விபத்து- டிரைவர் உயிர் தப்பினார்

Update: 2021-09-04 19:47 GMT
திருச்சி, செப்.5-
லால்குடி வாளாடி பகுதிதயை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகன் ராஜீவ்காந்தி (வயது 29). இவர் திருச்சியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தார். அப்போது செந்தண்ணீர்புரம் அருகே வந்த போது,  கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் உள்ள சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காரில் சிக்கிய ராஜீவ்காந்தியை மீட்டனர். அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்