மகாளய அமாவாசை சிறப்பு ரெயில்

மகாளய அமாவாசை சிறப்பு ரெயில் திருச்சி வழியாக காசிக்கு செல்கிறது

Update: 2021-09-04 19:42 GMT
திருச்சி, செப்.5-
இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு பாரத தரிசன சுற்றுலா ரெயில் இயக்க ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி வருகிற 30-ந்தேதி மதுரையில் இருந்து "மகாளய அமாவாசை சிறப்பு காசி கயா யாத்திரை சிறப்பு ரெயில்" இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது. முதலில் அயோத்தி ராமஜென்ம பூமி தரிசித்தல், கயாவில் மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிண்டம் செலுத்துதல், காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம், அலகாபாத் திரிவேணி சங்கமம், கொல்கத்தா உள்ளூர் பகுதிகளை சுற்றி பார்த்தல் மற்றும் விஜயவாடா கனகதுர்க்கா சக்தி பீடம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்கிறது.ரெயில் பயண கட்டணம் தலா ஒருவருக்கு ரூ.11 ஆயிரத்து 340 ஆகும். இந்த பயணத்திற்கான டிக்ெகட்டுகளை திருச்சி ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய www.irctctourism.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்