வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2021-09-04 16:46 GMT
கோவை

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). இவர் வ.உ.சி. பூங்கா அருகே வந்த போது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், விஜய் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் அவர்கள் 2 பேர் மீதும் கொள்ளை மற்றும் நகை பறிப்பு உள்பட பல வழக்குகள் உள்ளன. 

எனவே அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய துணை கமிஷனர் உமா, இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். 

அதன்பேரில் மணிகண்டன், விஜய் ஆகிய 2 பேரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர் உத்தரவிட்டார்.

 அந்த நகலை கோவை சிறையில் உள்ள மணிகண்டன், விஜய் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்