தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துெகாண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பழங்குளம் குறத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது45). கூலித்தொழிலாளியான இவர் குடிக்கு அடிமையாகி அடிக்கடி குடும்பத்தில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் ஆனந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரின் மகன் நவநீத கிருஷ்ணன் (20) அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.