உடுமலை கச்சேரி வீதியில் மழைநீர்வடிகால் கட்டும் பணியின் போது அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விரிசல் விட்டது.

உடுமலை கச்சேரி வீதியில் மழைநீர்வடிகால் கட்டும் பணியின் போது அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விரிசல் விட்டது.

Update: 2021-09-04 15:35 GMT
உடுமலை, 
உடுமலை கச்சேரி வீதியில் மழைநீர்வடிகால் கட்டும் பணியின் போது அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விரிசல் விட்டது.
அரசு மருத்துவமனை
உடுமலை நகராட்சி பகுதியில் வ.உ.சி.வீதி, கச்சேரி வீதி உள்ளிட்டஇடங்களில், நகராட்சி சார்பில்மழைநீர் வடிகால் கட்டும்பணிகள் நடந்து வருகின்றன. உடுமலை வ.உ.சி.வீதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் வார்டு உள்ளது. இந்த வார்டு பகுதிக்கான பிரதான நுழைவுவாயில் அரசு மருத்துவமனை வளாகத்தின் உள்பகுதியில் உள்ளது. 
இந்த குழந்தைகள் வார்டு பகுதிக்கு குழந்தைகளை பார்ப்பதற்குவரும் உறவினர்கள் வந்து செல்வதற்கான நுழைவு வாயில்கச்சேரி வீதி பகுதியில் உள்ளது. அதனால் மருத்துவமனை வளாகத்தில் கச்சேரி வீதியில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் குழந்தைகளின் குடும்பத்தினர், உறவினர்கள் உட்கார்ந்து இருப்பது வழக்கம். இந்த நிலையில் கச்சேரி வீதியில் நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டும் பணிகள்நடந்து வருகிறது.
சுற்றுச்சுவரில் விரிசல்
இந்த பணியின் போது அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விரிசல் விட்டது. அந்த சுவற்றில் சிலர் சாய்ந்து நிற்பதும் உண்டு. அதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு, சுற்றுச்சுவரில் விரிசல் விட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளைமேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 இந்த நிலையில் அங்கு குழந்தைகள் வார்டுக்கு செல்வதற்காக ஏற்கனவே அங்கு கழிவுநீர் கால்வாயின் குறுக்கே இருந்த கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் கட்டும் பணிக்காக நேற்று  இடித்து அகற்றப்பட்டது. இனி அங்கு மழைநீர் வடிகால் கட்டி, பாதை அமைக்கும் வரை, குழந்தைகள் வார்டுக்கு செல்கிறவர்கள் வ.உ.சி.வீதிக்கு சென்று, மருத்துவமனையின் முன்பகுதி வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்