விறகு அடுப்பை பற்றவைத்து நூதன ஆர்ப்பாட்டம்

விறகு அடுப்பை பற்றவைத்து நூதன ஆர்ப்பாட்டம்;

Update: 2021-09-04 15:31 GMT
திருப்பூர், 
கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டரை பாடையில் தூங்கி வந்தனர். பின்னர் விறகு அடுப்பை மூட்டி பற்றவைத்து சமையல் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் குறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்