மாடுகளை திருடியவர் கைது

தேசூர் அருகே மாடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-04 12:18 GMT
சேத்துப்பட்டு

தேசூர் அருகே மாடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள பெருகடப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவருக்கு சொந்தமான 3 பசுமாடுகள், ஒரு கன்றுக்குட்டியை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்து இருந்தார், 

கடந்த 2-ந் தேதி காலையில் பார்த்தபோது 3 பசுமாடுகள், ஒரு கன்றுக்குட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெருமாள் தேசூர் போலீசில் புகார் செய்தார்.  இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி உத்தரவின் பேரில், வந்தவாசி துணை போலீஸ்  சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் தனிப்படை அமைத்து பசுமாடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேசூர் போலீசார் கோழிப்புலியூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், 

அப்போது வேகமாக வந்த மினிவேனை மடக்கி விசாரணை செய்தபோது, சேத்துப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் ஆஜித் (வயது 29), முன்னுக்குப்பின் முரணாக கூறினார். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஆஜித்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், 3 பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டியை திருடியதை ஒப்புக்கொண்டார்., 

பின்னர் 3 பசுமாடுகள், ஒரு கன்றுக்குட்டியை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர், இதையடுத்து ஆஜித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்