டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 13 ஆசிரியர்கள் தேர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் 2020-21-ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
கலசபாக்கம் ஒன்றியம் கீழ்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீ.கிருபானந்தம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வேட்டவலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அ.முருகையன், மேற்கு ஆரணி ஒன்றியம் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) து.விஜயலட்சுமி, செங்கம் ஒன்றியம் குப்பநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.தமிழ்கனி, துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) கி.முருகன்,
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) ம.ரகு, செங்கம் ஒன்றியம் மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.ஜேம்ஸ்எட்வர்ட்தாஸ், ஜவ்வாதுமலை ஒன்றியம் கூட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.பரந்தாமன்,
திருவண்ணாமலை ஒன்றியம் சு.வாளவெட்டி ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் து.மோகன்ராஜ், துரிஞ்சாபுரம் ஒன்றியம் காட்டுவானத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சேட்டு, தண்டராம்பட்டு ஒன்றியம் ந.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.அசோகன்,
துரிஞ்சாபுரம் ஒன்றியம் கீழாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மூ.கேசவன், செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் க.கோவேந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.