இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-04 12:05 GMT
திருவண்ணாமலை

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய போலீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 31). 

இவர் திருவண்ணாமலையில் உள்ள ஜெராக்ஸ் எந்திரம் விற்பனை மற்றும் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் பணி செய்த போளூரை சோந்த 27 வயது இளம்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

தற்போது அவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும், மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்