டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் வருகை குறைந்தது
டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் வருகை குறைந்தது
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாததால், அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.