மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மேலும் ஒரு பள்ளி மாணவர் மாயம்
மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மேலும் ஒரு பள்ளி மாணவர் மாயமாகி உள்ளார். ஏற்கனவே மாயமான 4 பேரின் கதி என்ன ஆனது? என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சென்னை,
சென்னையை அடுத்த பல்லாவரம் கலைவாணி தெருவைச் சேர்ந்தவர் அக்பர் (வயது 17). இவர், தாம்பரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை அக்பர், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களான குரோம்பேட்டையை சேர்ந்த புருஷோத்தமன் (17), யுவராஜ் (17), இஞ்சேக் (17), தமிழ் (17), சதீஷ்குமார் (17), பல்லாவரத்தை சேர்ந்த ஜான் ரீகன் (17) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.
அங்கு அக்பர், புருஷோத்தமன், யுவராஜ், ஜான் ரீகன் ஆகிய 4 பேரும் அவ்வையார் சிலைக்கு பின்புறம் உள்ள கடலில் இறங்கி குதூகலமாக குளித்துக்கொண்டிருந்தனர். மற்ற 3 பேரும் கடற்கரை மணற்பரப்பில் உட்கார்ந்து அவர்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்தவாறே ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருந்தனர்.
கடலில் மூழ்கி மாயம்
இந்தநிலையில் கடலில் திடீரென தோன்றிய ராட்சத அலை, அங்கு குளித்துக்கொண்டிருந்த 4 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தப்பதை கரையில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் நண்பர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்த மீனவர்கள் சிலர் கடலில் குதித்து, புருஷோத்தமன், யுவராஜ், ஜான்ரீகன் ஆகிய 3 பேரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் ராட்சத அலையில் சிக்கிய அக்பர் மாயமாகிவிட்டார். அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மெரினா போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், மீனவர்களால் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு முதல் உதவி அளித்து ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே 4 பேர்...
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை மாட்டிக்கொண்டும், படகுகள் மூலமும் கடலுக்குள் இறங்கி மாயமான பள்ளி மாணவர் அக்பரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மெரினாவில் குளித்தபோது சபரிநாதன், விமல், தர்மராஜன் ஆகிய மாணவர்களும், திருவான்மியூர் கடற்கரையில் ஒருவரும் என ஏற்கனவே 4 பேர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர். கடலோர காவல் படையும், தீயணைப்பு வீரர்களும் மாயமானவர்களை தொடர்ந்து தேடியும் இதுவரையிலும் அவர்கள் குறித்த எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
கதி என்ன?
கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு கடந்த மாதம் 23-ந்தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடற்கரை திறக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சென்னையில் 5 பேர் கடலில் குளித்தபோது மாயமாகி உள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே மாயமான 4 பேரின் கதியும், தற்போது மாயமான மேலும் ஒரு மாணவரின் நிலையும் என்ன ஆனது? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.