தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொலை

பெங்களூருவில், மதுபான விடுதியில் வைத்து முறைத்து பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை அடித்து கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update: 2021-09-03 20:37 GMT
பெங்களூரு:

முறைத்து பார்த்ததால் தகராறு

  பெங்களூரு பசவேஸ்வராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெமல் லே-அவுட்டில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 49). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஹவனூர் சர்க்கிளில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று பாலாஜி மதுஅருந்தினார். பின்னர் பாலாஜி மதுபான விடுதியின் காசாளரிடம் சென்று பணம் கொடுத்தார்.
  இந்த சந்தர்ப்பத்தில் இன்னொருவரும், காசாளரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது பாலாஜி அந்த நபரை முறைத்து பார்த்ததாக தெரிகிறது. இதனால் பாலாஜிக்கும், அந்த நபருக்கும் இடையே சண்டை உண்டானது.

அடித்து கொலை

  பின்னர் மதுபான விடுதியின் அருகே உள்ள கடையில் பாலாஜி நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு அவரிடம் சண்டை போட்ட நபர் உள்பட 3 பேர் வந்தனர். அவர்கள் பாலாஜியை சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.
  
இதுகுறித்து பசவேஸ்வராநகர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்