பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி; 2 பேர் கைது
கடையம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள லட்சுமியூர் வடக்கு தெருவை சேர்ந்த தாமோதரன் மனைவி சொர்ண தேவி (வயது 30). இவர் கடந்த மாதம் 13-ந் தேதி லட்சுமியூர்- கடையம் பிரதான சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சொர்ண தேவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தூத்துக்குடி 2-ம் கேட் தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்தி ஆனந்த் (26) மற்றும் சுப்பிரமணியன் மகன் ராம லட்சுமணன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் அவர்கள் இருவரையும் கைது செய்தார்.