ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் கைது;

Update: 2021-09-03 20:04 GMT
மதுரை
மதுரை கரிமேடு போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கரிமேடு மீன்மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். அதில் புதுஜெயில்ரோடு முரட்டன்பத்திரி மாறன்(வயது 51), அவரது மனைவி நீலாவதி(40), ஆரப்பாளையம் சிவக்குமார் (24) என்பதும், அவர்கள் ஆட்டோவில் சென்று கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்