மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் திருட்டு

கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2021-09-03 20:04 GMT
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்டியில் வைத்தனர்
கொட்டாம்பட்டி அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகு (வயது 58). விவசாயி. இவர் கொட்டாம்பட்டி-திருச்சி சாலையில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து 1 லட்சம் ரூபாயும், மருமகள் முத்தழகி வங்கி கணக்கில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயும் எடுத்துள்ளார். மொத்தம் 3 லட்சம் பணத்தை அவருடைய மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்து பூட்டி கொண்டு கொட்டாம்பட்டி பழைய காவல் நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடை முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 40 ஆயிரம் ரூபாயினை கையில் எடுத்துகொண்டார். மீதமுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயினை இருசக்கர வாகனத்தில் பொருத்தியிருந்த பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு ஜவுளிக்கடையில் பொருட்கள் வாங்க சென்றார். 
 ரூ.2 லட்சத்து 60 ஆயிரம்
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து உள்ளே இருந்த ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை  திருடிவிட்டு தப்பினர். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு திரும்பிய அழகு, பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
இதுகுறித்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பதிவான காட்சி உதவியுடன் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்