காப்பக குழந்தைகள் கடத்தல் விவகாரம்: 2 பேருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு

காப்பக குழந்தைகள் கடத்தல் விவகாரம்: 2 பேருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2021-09-03 20:04 GMT
மதுரை
மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் இதயம் அறக்கட்டளை செயல்பட்டு வந்தது. இந்த அறக்கட்டளையின்கீழ் இருந்த காப்பகத்தில் 2 குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி, வேறு நபர்களுக்கு குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் காப்பகத்தின் இயக்குனர் சிவகுமார், அவரது உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட பலரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைதான ராஜா, செல்வி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார

மேலும் செய்திகள்