எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-03 19:44 GMT
பேட்டை:
பேட்டையில் நெல்லை தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை தொகுதி தலைவர் இலியாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் கவுஸ் வரவேற்றார். நெல்லையின் பல்வேறு இடங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும், 48, 49-வது வார்டு ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு துறை ரீதீயான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா கண்டன உரையாற்றினார். பொருளாளர் முகம்மது காசிம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்