679 பேர் மீது வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-09-03 17:28 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் அந்தந்த பகுதி போலீசார் நேற்றுமுன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு சிவப்பு விளக்கு ஒளிரும்போது கடந்து சென்றதாக 6 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 49 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவர் மீதும், அதிக பாரம் ஏற்றி சென்றதாக ஒருவர் பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிசென்றதாக 7 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 407 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 129 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாத 26 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 53 பேர் உள்பட 679 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.85 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கொரோனா பரவிவரும் நிலையில் அரசின் உத்தரவினை மதிக்காமல் முககவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 33 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்