ரெயிலில் மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது

ரெயிலில் மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-03 17:13 GMT
காரைக்குடி, 
ரெயிலில் மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிப்பு
காரைக்குடி ெரயில்வே நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாமிற்கு பயணிகளும் பொதுமக்களும எளிதாக சென்று வந்த பாதையை ெரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டது. 
இதனால் நீண்ட தூரம் சுற்றி 3-வது பிளாட்பாரத்தை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அடைக்கப்பட்ட பாதையை திறந்துவிட கோரி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 
அதனையொட்டி தாசில்தார் மாணிக்கம், போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஒரு வாரத்தில் பாதையை திறந்து விடுவதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் ெரயில்வே நிர்வாகம் தங்கள் கூறியபடி பாதையை திறக்க மறுத்து விட்டது. 
கைது
இதனால் நேற்று காலை 8.20 மணி அளவில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் அதன் மாநில துணைச்செயலாளர் பி. எல். ராமச்சந்திரன் தலைமையில் திருச்சி- ராமேசுவரம் செல்லும் ெரயிலை காரைக்குடி ெரயில்வே நிலையத்தில் மறித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையொட்டி ெரயில்வே போலீசார் பி.எல். ராமச்சந்திரன், காரைக்குடி நகர் ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்