மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பம்:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பத்தில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்வேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் விறகு வைத்து சமையல் செய்தனர். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்பம் பகுதி செயலாளர் லெனின், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.