திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமி கடத்தல்

பெரணமல்லூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-03 16:04 GMT
சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

சிறுமி கடத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), கூலி தொழிலாளி.  இவர் வசிக்கும் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். 

இந்த நிலையில்  கடந்த 28-ந் தேதி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மணிகண்டன் அழைத்து சென்றார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரணமல்லூர்  போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் இருவரையும் ேதடி வந்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

இந்த நிலையில், நரியம்பாடி கிராமத்தில் மணிகண்டனின் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு செய்யாறில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்  போலீசார் ரோந்து பணியில் இருக்கும்போது மணிகண்டன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

அவரை போலீசார் பிடித்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்