திருப்பூர் மாநகரில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொத்தமாக கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாநகரில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொத்தமாக கொரோனா தடுப்பூசி;
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று ஆணையாளர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
பணியாளர்களுக்கு தடுப்பூசி
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு என சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் நடத்தப்படும் முகாம்களில் பங்குபெறும் பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் தடுப்பூசி வழங்கும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற இலக்கினை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. https://forms.gle/eGKyEE8a8xfMcmU26என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் அனைத்து சங்கங்கள் போன்றவற்றின் மூலம் அங்கே பணிபுரியும் பணியாளர்களுக்கு மொத்தமாக தடுப்பூசி வேண்டும் என்ற தங்களின் விண்ணப்பத்தை அதில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 சதவீதம் தடுப்பூசி
எனவே தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் அனைத்து சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த உரிமையாளர்கள், பிரதிநிதிகள் இதை பயன்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.