திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு ஓட்டல் இடித்து அகற்றம்
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு ஓட்டல் இடித்து அகற்றப்பட்டது.;
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 80 அடி ரோட்டில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ஓட்டல் நடத்தி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.
அதன் பேரில் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு ஓட்டலை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.