கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கோவை
சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது
தூய்மை பணியாளர்களின் வேலை நேரம் காலை 5.45 மணி ஆகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொது கழிவறைகள் இல்லாததால் பொதுவெளியில் கழிவுகளை அகற்றுவதற்காக அந்த நேரம் ஏற்படுத்தப் பட்டது.
தற்போதைய அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் உள்ளன. இப்போதும் காலை 5.45 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்றால் 4 மணிக்கு எழுந்து புறப்பட்டு வர வேண்டி உள்ளது.
இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனிக்க முடிவதில்லை.
மேலும் கோவை மாநகரில் குடியிருந்த தூய்மை பணியாளர்களை பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரணத்தம், வெள்ளலூர், மலுமிச் சம்பட்டி ஆகிய பகுதிகளில் குடியமர்த்தி உள்ளனர்.
அங்கிருந்து நகருக்குள் வர போதிய பஸ் வசதி இல்லை. மற்ற மாவட்டங்களில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.550 முதல் ரூ.605 வரை குறைந்தபட்ச கூலி வழங்கப்படுகிறது. ஆனால் கோவையில் ரூ.475 மட்டுமே வழங்கப் படுகிறது.
பேரூராட்சிகளில் ரூ.300 மட்டுமே வழங்கப்படுகிறது. பணிக்கு வரும் நேரத்தை மாற்ற வேண்டும்.
கோவை மாநகராட்சி பணியாளர்க ளிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி பணத்தை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.