டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
களியக்காவிளை அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
டாஸ்மாக் ஊழியர்
களியக்காவிளை அருகே முண்டபிலாவிளை பனங்காலையை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேைல பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுனில்குமாரின் மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால், அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுனில்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சுனில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.