செல்போன் திருடியவர் கைது

ராஜபாளையம் பகுதியில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-02 21:04 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் உள்ள முருகன் என்பவரது மகள் கீர்த்தி ஜெகன் (வயது 18). மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது செல்போனை சார்ஜரில் போட்டு ஜன்னலில் வைத்து இருந்ததாகவும், அதன் பின்னர் பார்த்தபோது செல்போன் காணவில்லை என்று தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த குமார் மகன் அருண்குமார் என்பவரை கைது செய்து செல்போனை மீட்டனர்.

மேலும் செய்திகள்