மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு பிசியோதெரபி உபகரணங்கள்
மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு பிசியோதெரபி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் மகாத்மா காந்திஜி சேவா சங்கம் மூலம் செயல்படும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான இயன்முறை (பிசியோதெரபி) உபகரணங்கள் மற்றும் சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் தவமணி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வாசுதேவநல்லூர் கிளை மேலாளர் காசிராஜன் இயன்முறை உபகரணங்கள் மற்றும் நல உதவிகளை வழங்கினார். பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் சங்கர சுப்பிரமணியன், ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை டாக்டர் புனிதா, பள்ளி பணியாளர்கள் குருவம்மாள், கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.