பார்வையற்ற பெண்களுக்கு சித்த மருந்து
பார்வையற்ற பெண்களுக்கு சித்த மருந்து வழங்கப்பட்டது.;
நெல்லை:
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் அங்கமான பாளையங்கோட்டை சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவு சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ‘அசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி பொது மக்களுக்கு சித்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் ஆயுஷ் உணவு முறை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்ற பெண்கள் இல்லத்தில் நேற்று முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பெண்களுக்கு மருந்துகளை வழங்கினார். அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி, மாவட்ட சமூக நல்வாழ்வு துறை அலுவலர் சரசுவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேராசிரியர் சுபாஷ் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். சித்த ஆராய்ச்சி அலுவலர் சிவரஞ்சனி நன்றி கூறினார்.
வருகிற 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.