மணல் கடத்திய மொபட்டு பறிமுதல்; வாலிபர் மீது வழக்கு
மணல் கடத்திய மொபட்டு பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேற்று இடங்கண்ணி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பிள்ளையார்குளம் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (33) என்பவர் தனது மொபட்டில் 5 மூட்டைகளில் மணல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும் கார்த்திகேயன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.