இளம்பெண் மாயம்
இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கினார். பின்னர் அவரை காணவில்லை. இதையடுத்து அவரது தோழிகள், உறவினர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து முருகேசன், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து மாயமான அபிநயாவை தேடி வருகிறார்.