காரியாபட்டி அருகே சோலைகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை (வயது 73). தனியார் நிறுவன காவலாளி. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிச்சை தனது மோட்டார் சைக்கிளின் சாவியை தொலைத்துவிட்டு பக்கத்து வீட்டு அருகே உள்ள இவரது தம்பி பரமசிவம் மகன் துரைப்பாண்டி என்பவரது வீட்டு பக்கம் சென்று தேடி உள்ளார். அதற்கு துரைப்பாண்டி எதற்கு என் வீட்டு பக்கம் எதை வந்து தேடுகிறாய்? என்று கூறி தகராறு செய்து உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த துரைபாண்டி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிச்சை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இது குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.