சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சமூக வலைதளம் மூலமாக பழகி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-02 18:17 GMT
அரக்கோணம்

சமூக வலைதளம் மூலமாக பழகி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). சமூக வலைதளம் மூலமாக அரக்கோணம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார்  சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

மேலும், தலைமறைவாக இருந்த சந்துருவை தேடிவந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் பகுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விரைந்து சென்று சந்துருவை பிடித்தனர்.

 பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்