சாராயம் விற்ற 2 பேர் கைது
வாணியம்பாடி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக -ஆந்திர எல்லை பகுதிகளில் உள்ள மாத கடப்பா, தேவராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாதகடப்பா மலையில் உள்ள ஒரு புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த மாதகடப்பா பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 30), ஏமந்தகுமார் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.